| @ கடல்வெளி மணல்மேட்டில் |
| புதைந்துகிடக்கிறது |
| காதலின் ரகசியங்கள் |
| @ வளையல் துண்டுகள் |
| புழுவானது எப்போது ? |
| கொத்தும் கோழிகள் |
| @ நினைக்கும் மனமின்றி |
| காதலியின் போக்கு... |
| மறதியை மறந்ததால் |
| @ அன்பொடு அகத்தூய்மை |
| அழைத்துச் செல்லும் |
| அறிவுச் சுரங்கத்தினுள் |
| @ பலவீனமான சிந்தனை |
| தகர்த்துவிடுகிறது |
| வெற்றியின் படிகளை |
| @ ஒப்பிடும் தன்மையால் |
| உருக்குலைந்து போகிறது |
| நம்பிக்கை
வாசல் .....கா.ந.கல்யாணசுந்தரம். |

No comments:
Post a Comment