Showing posts with label தமிழ் ஹைக்கு கவிதைகள். Show all posts
Showing posts with label தமிழ் ஹைக்கு கவிதைகள். Show all posts

Sunday, September 11, 2016

முரண்களின் வாழ்வு !





முரண்களின் வாழ்வு !
**********************************
* தன் பெயரை விரும்பாத
வழக்கறிஞர் 
அரிச்சந்திரன்
* இவர் பெயருக்குத்தான்
மருத்துவர் ...
வைத்தியநாதன்
* கசாப்பு கடை
உரிமையாளர்...
காந்தி !
* முதியோர் பென்ஷன்
கைநாட்டு போட்டாள்
சரஸ்வதி !
* குளம் காணவில்லை
ஊரின் பெயர் மட்டும் ....
தாமரைக்குளம் !
.............கா.ந.கல்யாணசுந்தரம்

Tuesday, February 5, 2013

மழலைகளின் கையசைப்பில்

 
 
 
 
மழலை மொழியறியாது
மகிழ்வோடு பழகின...
பொம்மைகள் !

மழலைகளின் கையசைப்பில்
மண்டிக்கிடந்தது....
மனிதநேயம்!

இறைவனின் பங்களிப்பாய்
இல்லங்களில் மலர்ந்திருந்தது
மழலை மொழி !

நடைவண்டிக்கு
தெரிந்திருந்தது....
குழந்தை வளர்ப்பு!

ஒரு மரப்பாச்சியின்
முதல் கனவு...
மழலைக்கு தாயானது!



........கா.ந.கல்யாணசுந்தரம்

Friday, April 13, 2012

அற்புத சிலையின்.....





கல்லுடன் உளி

உறவாடியது....

அற்புத சிலையின் பிறப்பு!

.............கா.ந.கல்யாணசுந்தரம்