Thursday, September 20, 2012

என்ன தவம் செய்தோம்




என்ன தவம் செய்தோம் 
ஏணிப்படிகளாவதற்கு...
பெருமிதத்தில்  மூங்கில்கள் !
 
 
...........கா.ந கல்யாணசுந்தரம் 

பிரிந்து செல்லும் பாதைகள்

 
 
 
 
 
 
 
 
 
 
பிரிந்து செல்லும் பாதைகள்
எப்போதும் சந்தித்துக்கொள்கின்றன...
பிரிந்த இடத்தில் !

ஒரு பனிபொழிந்த காலை
துல்லியமாய் கேட்கிறது...
மலர்களின் சிரிபொலி !

உதிர்ந்த இறகினில்
உறங்காமல் விழித்திருக்கிறது...
ஒரு பறவையின் தேடல் !

ஆற்றுப் படுகை நாணலிடம்
கேட்கத் தோன்றுகிறது..
புயலின் வலிமையை !

கிராமிய மணம் கமழும்
உயிரோவியங்களுடன் ...
மாலை நேரத்து ஏரிக்கரை !

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

Friday, April 13, 2012

அற்புத சிலையின்.....





கல்லுடன் உளி

உறவாடியது....

அற்புத சிலையின் பிறப்பு!

.............கா.ந.கல்யாணசுந்தரம்

Sunday, September 25, 2011

இல்லம் நிறைந்திருந்தது

இல்லம் நிறைந்திருந்தது
பொன்பொருளால் அல்ல...
மழலைச் சொற்களால்!

....கா.ந.கல்யாணசுந்தரம்.




இறைவா...உனக்கு வாகனமாய்
இருப்பதைவிட குடையாய் இருப்பேன்....
பாரம் சுமப்பவருக்கும் நிழல்தரவே!

.....கா .ந .கல்யாணசுந்தரம் .

நட்பின் இலக்கணம்!



 
 
 
பிரித்து எழுதி
பொருள் கூற முடியாது...
நட்பின் இலக்கணம்!

 
 
.....கா.ந.கல்யாணசுந்தரம்.

Saturday, September 17, 2011

முதுமை உள்ளம்....




இருமலுடன் இரவைக் கழித்த
முதுமயின் இதயம் துடித்தது...
மகனே உறக்கம் கலைந்துபோனதா?

......கா.ந.கல்யாணசுந்தரம்.