தமிழ் ஹைக்கூ கவிதைகள்
கா.ந.கல்யாணசுந்தரம்
Sunday, September 25, 2011
இல்லம் நிறைந்திருந்தது
இல்லம் நிறைந்திருந்தது
பொன்பொருளால் அல்ல...
மழலைச் சொற்களால்!
....கா.ந.கல்யாணசுந்தரம்.
இறைவா...உனக்கு வாகனமாய்
இருப்பதைவிட குடையாய் இருப்பேன்....
பாரம் சுமப்பவருக்கும் நிழல்தரவே!
.....கா .ந .கல்யாணசுந்தரம் .
நட்பின் இலக்கணம்!
பிரித்து எழுதி
பொருள் கூற முடியாது...
நட்பின் இலக்கணம்!
.....கா.ந.கல்யாணசுந்தரம்.
Saturday, September 17, 2011
முதுமை உள்ளம்....
இருமலுடன் இரவைக் கழித்த
முதுமயின் இதயம் துடித்தது...
மகனே உறக்கம் கலைந்துபோனதா?
......கா.ந.கல்யாணசுந்தரம்.
நெஞ்சம் உணர்ந்தது...
அவளின் விரல் பட்டதும்
நெஞ்சம் உணர்ந்தது...
ஒரு புரிதலுக்கான பிரிவை!
......கா.ந.கல்யாணசுந்தரம்.
உள்ளம் மட்டும்....
ஊஞ்சலில் ஆட அமர்ந்தும்
அவனை நினைத்து அவளின்....
உள்ளம் மட்டும் ஊசலாடியது
...கா.ந.கல்யாணசுந்தரம்.
நாராய் நாராய் செங்கால் நாராய்.....
பனங்கிழங்கு
அலகுகளால்
மீன்பிடித் தொழில்...
செங்கால் நாரைகள்!
....கா.ந.கல்யாணசுந்தரம் .
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)