தமிழ் ஹைக்கூ கவிதைகள்
கா.ந.கல்யாணசுந்தரம்
Saturday, September 17, 2011
புன்னகை மறந்த மானுடம்
ஒரு தலைமுறைக்கான இடைவெளியில்
தொலைத்ததை மீண்டும் தேடுகிறது....
புன்னகை மறந்த மானுடம்!
........கா.ந.கல்யாணசுந்தரம்.
Wednesday, September 14, 2011
மழலையின் அறிவிப்பு
அச்சமும் நாணமும்
பெண்மையின் இலக்கணமென ...
அறிவுறுத்தும் மழலை!
அடுத்தவேளை
அடுத்தவேளை
உணவுக்கில்லை...
சமைந்தாள் மகள் !
பாலில் நெல்
பாலில்
நெல்
கலந்தபோது....
பதறியது பாலாடை!
Sunday, September 11, 2011
சரியான மருத்துவம் இல்லை...
வாதநோய்க்கு இன்னும்
சரியான மருத்துவம் இல்லை...
தீவிரவாதம்!
Saturday, September 10, 2011
விதைக்குள் விருட்சம்
விருட்சங்களைக் காப்பாற்றுங்கள்
காரணம் விதைகள் வேண்டும்....
விருட்சங்களை எப்போதும் காண!
Tuesday, September 6, 2011
அந்தர வாழ்க்கை.....
கால் வயிற்றுக் கஞ்சிக்கு
கயிற்றில் அந்தர வாழ்க்கை...
தூக்கிலிடு சமுதாயத்தை !
......கா.ந.கல்யாணசுந்தரம்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)