Wednesday, December 21, 2016
Wednesday, October 19, 2016
Sunday, October 16, 2016
Sunday, September 11, 2016
முரண்களின் வாழ்வு !
முரண்களின் வாழ்வு !
**********************************
**********************************
* தன் பெயரை விரும்பாத
வழக்கறிஞர்
அரிச்சந்திரன்
வழக்கறிஞர்
அரிச்சந்திரன்
* இவர் பெயருக்குத்தான்
மருத்துவர் ...
வைத்தியநாதன்
மருத்துவர் ...
வைத்தியநாதன்
* கசாப்பு கடை
உரிமையாளர்...
காந்தி !
உரிமையாளர்...
காந்தி !
* முதியோர் பென்ஷன்
கைநாட்டு போட்டாள்
சரஸ்வதி !
கைநாட்டு போட்டாள்
சரஸ்வதி !
* குளம் காணவில்லை
ஊரின் பெயர் மட்டும் ....
தாமரைக்குளம் !
ஊரின் பெயர் மட்டும் ....
தாமரைக்குளம் !
.............கா.ந.கல்யாணசுந்தரம்
Labels:
தமிழ் ஹைக்கு கவிதைகள்,
ஹைக்கூ கவிதைகள்
Friday, June 10, 2016
நம்பிக்கை வாசல்
@ கடல்வெளி மணல்மேட்டில் |
புதைந்துகிடக்கிறது |
காதலின் ரகசியங்கள் |
@ வளையல் துண்டுகள் |
புழுவானது எப்போது ? |
கொத்தும் கோழிகள் |
@ நினைக்கும் மனமின்றி |
காதலியின் போக்கு... |
மறதியை மறந்ததால் |
@ அன்பொடு அகத்தூய்மை |
அழைத்துச் செல்லும் |
அறிவுச் சுரங்கத்தினுள் |
@ பலவீனமான சிந்தனை |
தகர்த்துவிடுகிறது |
வெற்றியின் படிகளை |
@ ஒப்பிடும் தன்மையால் |
உருக்குலைந்து போகிறது |
நம்பிக்கை
வாசல் .....கா.ந.கல்யாணசுந்தரம். |
Sunday, May 29, 2016
ஞான மரபில் ....
ஆயிரக் கணக்கில்
அவல
காட்சிகள் ...
மூடிய இமைக்குள் !
இதயம் கனத்து
இடம்பெயர்ந்தது
...
பிரிவின்
வலி ...!
தோளில் அமர
துடித்தன
சுமைகள்...
இலகுவாய்
!
நெற்றியில் உதிரும்
வியர்வைத்
துளியில்...
உழைப்பின்
வாடை !
வெற்றியின் படிகளை
அடையாளம்
கண்டன ...
தோல்வியின்
கால்கள் !
மனித மனத்தின்
பெரும் பயணம்
ஞானமரபுகளைத் தேடி
நுண் அணுக்களின்
கூட்டுப் பொருட்கள்
பிரபஞ்சம்
ஆன்மீகத் தேடலில்
மூன்று வழித்தடங்கள்
பக்தி ஞானம் தியானம்
செயல்களின் வடிவம்
பிறப்பெடுக்கிறது...
நாம்
யார் எனும் சிந்தனைகளில் !
குற்றமற்ற கலாச்சாரத்தில்
பதுங்கியுள்ளது
அறிவியல் வாழ்க்கை !
நவீன தகவல் தொடர்புகள்
அடையாளம்
காட்டுகின்றன...
கலாச்சார
சீரழிவுப் பாதைகளை !
இலக்கண இலக்கியங்களின்
பாரம்பரியத்தில்
தோன்றியது...
தமிழ்மொழிக்
குடும்பம் !
இன்றைய சோர்வை விலக்கும்
திறனிருந்தால்...
நாளைய
மலர்தல் நமக்காகவே !
அடக்கமெனும் அணிகலன்
அணிந்தவர்கள்...
அறத்தின்
காவலர்கள் !
நற்செயல் நடப்பதெல்லாம்
நல்லோர்கள்
முடிவெடுக்கும்
இறைத்தன்மை
!
பயணத் திசைகளின்
வெற்றி இலக்குகள்
நம்மிடமே !
இழப்பதற்கு ஒன்றுமில்லை
கொண்டுவந்தது
ஏதுமில்லை
என்பதால் !
மனவமைதிப் பூங்காவில்
இடையிடையே
...
உறவுப்
பாலங்கள் !
சொற்பகாலங்களின்
வாழ்வுரிமை
...
குழப்பவாதிகளின்
குதூகலம் !
மன இறுக்கத்தில்
மேடைபோட்டு
அமர்ந்துவிடுகிறது ...
இறுமாப்பும்
கர்வமும் !
தன்னிலை மறந்தோர்கள்
முன்னிலை
வகித்தாலும்
தழைக்காது
தர்மவாழ்வு !
.....கா.ந.கல்யாணசுந்தரம்
சிலம்புச் செய்திகள் குறும்பா வடிவில்....
*மரபுவழி மங்கள நாணொடு
புகாரில் மனையறம் கொண்டாள்...
கற்புக்கரசி கண்ணகி !
*மாசறு பொன்னுடன்
நல்லறம் சிறக்க இல்லறமானது...
கோவலனின் வாழ்வு !
*தன்னிலை மறக்கும்
சொர்க்கபுரியானது...
நரவுப்பட்டின வசந்தவிழா!
*விடுதலை அறியா
விருப்பினனாகினான்...
கோமகன் கோவலன்!
*யாழிசை மீட்டியபடி கடலாடிய
கானல்வரிப் பாடல்கள்...
கோவலனோடு மாதவி !
*ஆடல்மகள் மாதவியின் கூடலில்
குன்றமன்ன பொருளிழந்தான்...
குற்றமற்ற கண்ணகியின் கணவன்!
*ஊழ்வினை உறுத்த
மாதவியின் கரம் நெகிழ...
கோவலனின் அடுத்த பயணிப்பு !
*பயனின்றி போனது
மாதவிக்கு ...
தோழி வசந்தமாலையின் தூது !
*விடியும்முன் நெடும்பயணம்
கவுந்தி அடிகளோடு
மதுரை மாநகர்க்கு
*கௌசிகன் மாடலன் மாதரி
இவர்களுடன் வாழ்வு...
சிலகாலமே கண்ணகிக்கு !
*சூழ்ச்சிமிகு பொற்கொல்லன்
ஆராயாத அந்தப்புர அரசன் ...
கொலைக்களம் கண்டான் கோவலன் !
*ஒற்றைக் காற்சிலம்பு
மாணிக்கப்பரல் தெறிக்கும் சாட்சியால்...
நீதி பிறக்க மதுரை எரிந்தது !
*போற்றா ஒழுக்கம் புரிந்தாலும்
மாறா உளத்திரத்தால்
பாட்டுடைத் தலைவியானாள் கண்ணகி !
*மலைவளம் கண்ட சேரன்
செங்குட்டுவன் அமைத்தான் ...
பத்தினிக்கோட்டம் கண்ணகிக்கு !
........கா.ந.கல்யாணசுந்தரம்
.
Labels:
காப்பிய மலர்கள்,
குறும்பா,
சிலப்பதிகார செய்திகள்,
ஹைக்கூ
Tuesday, April 19, 2016
Friday, January 29, 2016
மகரந்தங்களின் வசந்தகாலம்....
மகரந்தங்களின்
வசந்தகாலம்....
பட்டாம்பூச்சியின் அமர்வு !
வசந்தகாலம்....
பட்டாம்பூச்சியின் அமர்வு !
டிஜிட்டல் உலகம்
அறுவடை செய்கிறது....
விவசாயிகளின் தற்கொலைகள் !
அறுவடை செய்கிறது....
விவசாயிகளின் தற்கொலைகள் !
இசையின் சிகரங்களில்
ஏகாந்த நிலைதரும் .....
சலங்கை ஒலி !
ஏகாந்த நிலைதரும் .....
சலங்கை ஒலி !
விண் காணும் தளிர்கள்
மண் நோக்கி ....
சருகுகள் !
மண் நோக்கி ....
சருகுகள் !
தியாக ஒளி பரப்பி
என்றென்றும் நல்வழி காட்டும்....
தாயன்பு !
என்றென்றும் நல்வழி காட்டும்....
தாயன்பு !
..........கா.ந.கல்யாணசுந்தரம்
Subscribe to:
Posts (Atom)