
ஒரு புதுக்கவிதையாய்
காலைப்பனி மேய்கின்ற...
கிராமத்து களத்துமேடு!
ஒற்றைக்காலில் நின்றபடி
வயிற்றுப் பசிக்கான தவம்
ஆற்றுப்படுகை கொக்குகள் !
இளஞ்சூரியனை
பங்குபோட்டு குதூகலிக்கும்
தென்னை ஓலைகள் !
எங்களுக்கேது விடுமுறை
வானில் எழும்....
இரைதேடும் பறவைகள்!
அன்றலர்ந்த மலர்களை
விட்டு வையுங்கள்....
தேனருந்தும் வண்டினம்!
..........கா.ந.கல்யாணசுந்தரம்.
2 comments:
அருமை... இந்த தளத்திலும் Followers ஆகி விட்டேன்...
வாழ்த்துக்கள்... நன்றி...
நன்றி தனபாலன் அவர்களே.
Post a Comment